×

தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகளை தீவிரப்படுத்த கோரிக்கை

 

கோவை, ஜூலை 27: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல மன்ற கூட்டம் மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி பேசுகையில், ‘‘பீளமேடு எல்லை தோட்டம் ரோடு, பிகேடி நகர், விகே ரோடு போன்ற பகுதிகளில் தெரு நாய் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. கடந்த வாரம் பிகேடி நகரில் இரண்டு குழந்தைகளை கடித்து விட்டது.

இது குறித்து புகார் சொல்லியும் கருத்தடை பணிக்காக நாய் பிடிக்கும் வாகனம் வருவதாக சொல்லி இதுவரை வரவில்லை. எல்லைத் தோட்டம் ரோடு, முருகன் நகர் பகுதிகளில் நாய் வாகனம் வந்ததாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இதுவரை வரவில்லை. தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை இப்பகுதிகளில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். உடனடியாக அதனை சீர் செய்து தர வேண்டும்’’ என்றார்.

The post தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகளை தீவிரப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,North Zone ,Council ,Zone ,Kathirvel ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...