சென்னை: ராஜஸ்தான் அரசு முதன்முறையாக ஆன்லைன் தளங்களில் இருந்து வாழ்வாதாரம் பெறும் தொழிலாளர்களின் நலனுக்கான சட்ட மசோதாவை நிறைவேற்றிவுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜிஐஜி என்று அழைக்க கூடிய ஆன்லைன் தளங்களில் இயங்கும் ஓலா, ஸ்விக்கி, உபேர், சூமோடோ போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்கான ஜிஐஜி தொழிலாளர்கள் மசோதா 2023 என்ற மசோதாவை திங்கட்கிழமை மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
ஆன்லைன் தளங்களில் இருந்து வாழ்வாதாரம் பெறும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலனுக்கான மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெருமையை ராஜஸ்தான் அரசு பெற்றுள்ளது. இந்த மசோதா அடிப்படையில் விரைவில் ஜிஐஜி தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த நல வாரியம் ஜிஐஜி தொழிலாளர்களின் நலனுக்கான திட்டங்களை அரசுக்கு பரிந்துரைக்கும், அதுமட்டுமின்றி உரிமைகள் தொழிலாளர்களின் புகார்கள் மற்றும் சட்டத்தின் விதிகளை செயல்படுத்துவது தொடர்பான வழக்குகள் சரியான நேரத்தில் தீர்க்கப்படுவதை வாரியம் உறுதி செய்யும். இந்த சட்டம் செயல்படுத்தப்பட்ட 60 நாட்களுக்குள் ஜிஐஜி தொழிலாளர்களின் தரவுகளை அனைத்தும் மாநில அரசு இணையதள வெளியிடப்படும்.
மாநில அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பலன்களை ஜிஐஜி தொழிலாளர்கள் பெறவும், அவர்களின் குறைகளைக் கேட்கவும் இந்தச் சட்டம் உதவும். திறமை குறைந்த இளைஞர்களுக்கு ஜிஐஜி ஒர்க் மூலம் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. வேலைவாய்ப்பில் பெரும் பங்களிப்புகள் இருந்தபோதிலும், ஜிஐஜி தொழிலாளர்கள் தொழிலாளர் சட்டங்களின் வரம்பிற்குள் வரவில்லை. அத்தகைய சூழ்நிலையில், சாதாரண ஊழியர்களைப் போல அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. இந்தச் சட்டத்தின் மூலம், ஜிஐஜி தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிடைக்கும். மேலும் ஜிஐஜி தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருக்கிறார்.
The post முதன்முறையாக ஆன்லைன் தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலனுக்கான சட்ட மசோதா நிறைவேற்றம்: ராஜஸ்தான் அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.
