×

பல்கலை கழகங்களில் பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தன்னாட்சி உரிமை பறிபோகும்: கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு எதிர்ப்பு

சென்னை: பல்கலை கழகங்களில் பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தன்னாட்சி உரிமை பறிபோகும் என கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நடைமுறையால் பல்கலை கழகங்களின் தன்னாட்சி உரிமைகள் பறிபோகும் என எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலை கழக வளாகத்தில் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பல்கலைகழக ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

The post பல்கலை கழகங்களில் பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தன்னாட்சி உரிமை பறிபோகும்: கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : College Teachers' Collective Action Group ,Chennai ,College Teachers Joint Action Committee ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...