×
Saravana Stores

டூவீலர் மோதி டெய்லர் பலி

ஊத்தங்கரை, ஜூலை 20: ஊத்தங்கரை அடுத்த உப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(40), டெய்லரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு, அப்பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டூவீலர் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் மோதி டெய்லர் பலி appeared first on Dinakaran.

Tags : Taylor ,Uthangarai ,Annadurai ,Upparapatti ,Dinakaran ,
× RELATED காவல் நிலையங்களில் எஸ்பி திடீர் ஆய்வு