சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கினால் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் தொழிற்சங்கங்களுக்கும் ரூ.10 வாங்கக்கூடாது என அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கினால் சஸ்பெண்ட்: டாஸ்மாக் நிர்வாகம் appeared first on Dinakaran.
