×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முற்றுகை

பொன்னேரி: தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை கட்டுமான தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். பொன்னேரியில் உள்ள தொழிலாளர்கள் நல வாரிய அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ரூ.1000 இருந்து ரூ.3000 மாக உயர்த்த வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ..5000 போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், 55 வயதிற்கு மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும், பணி இடத்தில் மட்டுமின்றி விபத்து எங்கு நடந்தாலும் அதில் சிக்கி உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கும் ரூ.,5 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும், 1ம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும். நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் 13ம் தேதி கோட்டை நோக்கி 25,000 தொழிலாளர்கள் பேரணி சென்று முற்றுகையிட உள்ளதாகவும் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Labor Welfare Board ,Ponneri ,Workers' Welfare Board ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...