×

கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு உதவிய மோடி: சித்தராமையா திடுக் தகவல்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மோடி பிரசாரம் செய்த 28 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். பெங்களூரு விதான சவுதாவில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது: நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி சீரழித்துவிட்டார். மோடி பிரதமராக பதவியேற்ற பின் இந்த 9 ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. விலைவாசி உச்சத்தில் உள்ளது. மக்கள் இதேமாதிரி மோசமான சூழலிலேயே தொடர்ந்து வாழமுடியாது என்று கூறினார்.

மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய சித்தராமையா, கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி 28 இடங்களில் மோடி பிரசாரம் செய்தார். அவர் பிரசாரம் செய்த அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றது. அதனால் மக்களவை தேர்தலிலும் பாஜ கூட்டணி கண்டிப்பாக தோற்கும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

The post கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு உதவிய மோடி: சித்தராமையா திடுக் தகவல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Congress ,Karnataka ,Sidderamaiah ,Bengaluru ,Congress Party ,Legislation ,PM ,Sitaramaiah ,Siddaramaiah ,Dinakaran ,
× RELATED நாட்டு மக்கள் அடியோடு நிராகரித்த...