×

காட்டுயானைகள் பலா வேட்டை: காந்தளூர் விவசாயிகள் கதிகலக்கம்

மூணாறு: கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள மறையூருக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது காந்தளூர் ஊராட்சி. இப்பகுதியில் குளிர்கால காய்கறிகள் பழங்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. முக்கிய காய்கறிகள் பீன்ஸ், முட்டைகோஸ், காலிஃபிளவர், கேரட், உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு மற்றும் பழங்கள் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளம், பிளம்ஸ், பேரிக்காய், கொய்யா, பலாப்பழம், தாட்டுபுட்டான் ஆகியவையும் இங்கு விவசாயம் செய்யப்படுகின்றன.

தற்போது இங்கு பலாப்பழம் சீசன் என்பதால், பழங்களை சாப்பிட காட்டுயானை கூட்டம் அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. 2 மாதங்களாக பயிர்களை சேதப்படுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பலாப்பழத்தை மட்டுமே குறிவைத்து விவசாய நிலங்களில் இறங்குகிறது. நேற்று முன்தினம் காந்தளூர் பிரமரம் வியூ பாயின்ட் பகுதியில் 15 காட்டுயானைகள் விவசாய நிலங்களை சேதபடுத்தி சென்றன.

யானைக்கூட்டம் மறையூர் கரிமுட்டி முதல் காந்தளூர் பெருமலை பகுதி வரை உள்ள விவசாய நிலங்களில் பலாப்பழங்களை சேதப்படுத்தி வருகின்றது. காட்டுயானை கூட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தாலும், பாரம்பரியமாக இப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பெரும் வேதனையாக மாறி வருகிறது.

The post காட்டுயானைகள் பலா வேட்டை: காந்தளூர் விவசாயிகள் கதிகலக்கம் appeared first on Dinakaran.

Tags : Kandalur ,Moonaru ,Kerala ,Mundaru ,Dinakaran ,
× RELATED ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை