டொமினிக்கா: அனுபவமிக்க, சிறந்த, புதிய யுக்திகளை கையாளும் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ரவிசந்திரன்(36). இரண்டு காரணங்களுக்காக எப்போதும் விளையாட்டு உலகின் பார்வையிலேயே இருப்பார். திறமை இருந்தும் வாய்ப்பு தராமல் வெளியில் உட்கார வைக்கும் போது விமர்சனங்களாலும், அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சாதனை படைக்கும் போதும் பாராட்டுகளாலும் அஷ்வின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படும்.
உலக பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தும், சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெளியில் உட்கார வைக்கப்பட்ட போது பெரும் விமர்சனங்கள் எழுந்தன. இப்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைத்ததும், அவர் படைத்த சாதனையால் மீண்டும் பேசப்படுகிறார். ஆம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் இன்னிங்சில் நேற்று 3வது விக்கெட்டாக அல்சாரி ஜோசப்பை வீழ்த்தினார். அதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட் வீழ்த்திய 3வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
முதல் இடத்தில் 956 விக்கெட்களுடன் அனில் கும்ப்ளேவும், 2வது இடத்தில் 711விக்கெட்களுடன் ஹர்பஜன் சிங்கும் உள்ளனர். முதல் இன்னிங்சில் மேலும் 2 விக்கெட்களை வீழ்த்தியதின் மூலம் டெஸ்ட்களில் 479, ஒருநாள் ஆட்டங்களில் 151, டி20களில் 77 விக்கெட்கள் என மொத்தம் 702 விக்கெட்களை அறுவடை செய்துள்ளார். உலக அளவில் 17வது இடத்தில் இருக்கிறார்.
கேப்டன்கள், பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் அரசியல் செய்யாமல் அஷ்வினை பயன்படுத்தியிருந்தால் அவர் இந்நேரம் கும்ப்ளேவை நெருங்கியிருப்பார்.
* இந்தியா-வெ.இண்டீஸ் இடையே அதிகமுறை 5 விக்கெட்கள் அள்ளியவர்கள் பட்டியலில் மால்கம் மார்ஷல்(6முறை), ஹர்பஜன்(5),அஷ்வின்(5) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
* வெஸ்ட் இண்டீசில் அதிகமுறை 5விக்கெட் சுருட்டிய இந்தியர்கள் பட்டியலில் தலா 3முறை 5 விக்கெட்களை சுருட்டிய சுபாஷ் குப்தே, அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் உள்ளனர்.
The post அரசியலுக்கு இடையே அஷ்வின் 700 appeared first on Dinakaran.