×

கூலிப்படைகளை ஒழிக்கக் கோரி செங்கல்பட்டில் இன்று பாமக போராட்டம்: அன்புமணி அறிவிப்பு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட அறிக்கை: பாமக நகர செயலாளர் பூக்கடை நாகராஜ் கொல்லப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் கூலிப்படையினரால் நிகழ்த்தப்படும் படுகொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. இதில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

கூலிப்படை அட்டகாசங்களை முழுமையாக ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு நகரம் அம்பேத்கர் சிலை அருகில் பாமக சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு போராட்டம் நடத்தப்படும். அப் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கூலிப்படைகளை ஒழிக்கக் கோரி செங்கல்பட்டில் இன்று பாமக போராட்டம்: அன்புமணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pangam ,Chengalpattu ,Anbumani ,CHENNAI ,BAMAK ,city secretary ,Pookadai Nagaraj ,Panak ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...