×

தோனிக்கு பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், என்றென்றும் சிஎஸ்கே அணியின் ‘தல’ எனப் போற்றப்படும் எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் சாதனைகள் மற்றும் உங்கள் எளிமையான தொடக்கங்கள் இந்தியா முழுவதும் உள்ள எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையில், குறிப்பாக சாதாரண பின்னணியிலிருந்து வந்தவர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உங்கள் ஈடு இணையற்ற தலைமை பண்புகளால் நீங்கள் தொடர்ந்து ஒளிவீசிடவும், அனைவருக்கும் ஊக்கமளிக்கவும் வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post தோனிக்கு பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Dhoni ,Chennai ,M.K.Stalin ,MS Dhoni ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...