×

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.127 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

பள்ளிப்பட்டு: முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.127 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகளை மாவட்ட கலெக்டர் முன்னிலையில் அமைச்சர் ஆர்.காந்தி நேற்று தொடங்கி வைத்தார். கிராமப்புற சாலைகளை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சந்திரவிலசபுரம் ஊராட்சி சுந்தர்ராஜபுரம் முதல் ஆர்.கே.பேட்டை காவல் நிலையம் அருகே திருத்தணி சோளிங்கர் சாலை வரை 3 கி.மீ நீளத்திற்கு ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்துகொண்டு, முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில், சட்டமன்றத் தேர்தலில் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. பெண்கள் முன்னேற்றத்தை மையமாக வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ரூ.127 கோடி மதிப்பீட்டில் 255.33 கி.மீ நீளத்தில் சாலைப் பணிகள் தொடங்கப்படும். திமுக அரசு அமையும் போது தான் தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றது. பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாவட்ட துணை கலெக்டர் ரிஷப், செயற்பொறியாளர் ராஜவேலு, ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், ஒன்றிய குழு துணை தலைவர் திலகவதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி வெங்கடேசன், திமுக ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், பழனி, ரவீந்திரா, ஆர்த்தி ரவி, சீனிவாசன், சந்திரன், பள்ளிப்பட்டு பேரூர் செயலாளர் ஜோதிகுமார், பேரூராட்சி தலைவர் மணிமேகலை, ஒன்றிய குழு துணை தலைவர் பாரதி, ஊராட்சிமன்ற தலைவர்கள் ஆனந்தி செங்குட்டுவன், சித்ரா கணேசன், மோனிஷா சரவணன், ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.127 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur district ,Minister ,Pallipatu ,Tiruvallur district ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...