×

பன்னீர் ரோஸ் வீலை வீழ்ச்சி

ராயக்கோட்டை, ஜூன் 24: ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஒடையாண்டஅள்ளி, குரும்பட்டி, பண்டப்பள்ளி, தொட்டதிம்மன அள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள், சொட்டூநீர் பாசனத்தை பயன்படுத்தி, அதிக அளவில் பன்னீர்ரோஸ் சாகுபடி செய்துள்ளனர். ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பன்னீர் ரோஸ் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தவிர, வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்தம் பூக்களை கொள்முதல் செய்து வருகின்றனர். பன்னீர் ரோஸ் நாற்று விட்ட 3 மாதத்தில் செடிகளில் பூக்கள் பூக்க துவங்கி விடுகிறது. ெதாடர்ந்து 3 வருடம் பூக்கள் பூக்கக்கூடும். போதிய அளவு முகூர்த்த நாட்கள், கோயில் திருவிழாக்கள் இல்லாததால் மார்க்கெட்டுகளில் தேவை குறைந்து பன்னீர் ரோஸ் விலை குறைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த மாதம் பன்னீர் ரோஸ் கிலோ ₹100 முதல் ₹150 வரை விற்பனையானது. ஆனால் தற்போது விளைச்சல் அதிகரித்த போதிலும், தேவை குறைந்ததால் மார்க்கெட்டில் பன்னீர் ரோஸ் கிலோ ₹40க்கும் குறைவாக விற்பனையாகிறது. அதனால் பூக்களை பறிக்கும் ஆட்களுக்கு கூலி கொடுக்கவே போதவில்லை. மேலும், குடும்பத்தில் உள்ள நாங்களே பூக்களை பறித்து மார்க்கெட்டுக்கு அனுப்பினாலும், வியாபாரிகள் உடனடியாக பூவுக்கான காசை வழங்க 10 நாட்களுக்கும் மேல் ஆகி விடுகிறது. ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம் ₹20 கோடியில் அமைந்துள்ளது. இதை செயல்பட வைத்தால் மலர்களுக்கு உாிய விலை கிடைக்க வழி செய்யும். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சர்வதேச மலர் ஏல மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்,’ என்றனர்.

The post பன்னீர் ரோஸ் வீலை வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Paneer Rose Wheel Fall ,Rayakottai ,Odaiandaalli ,Kurumpatti ,Bandapalli ,Thottathimmana Alli ,Dinakaran ,
× RELATED லாரிகளில் கடத்திய கிரானைட் பறிமுதல்