×

லாரிகளில் கடத்திய கிரானைட் பறிமுதல்

ராயக்கோட்டை, மே 20: ராயக்கோட்டை அருகே ஓடையாண்டஅள்ளி அருகே, கிருஷ்ணகிரி உதவி புவியியலாளர், புவியியல் மற்றும் சரங்கத்துறை சரவணன், கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது, உரிய அரசு அனுமதியின்றி, 2 டாரஸ் லாரிகளில் 2 கருப்பு கிரானைட் கற்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை கண்ட அதிகாரிகள் லாரியை நிறுத்தும்படி கூறிய போது, லாரியை நிறுத்தி விட்டு 2 டிரைவர்களும் தப்பி ஓடி விட்டனர். தொடர்ந்து லாரி மற்றும் கிரானைட் கற்களை பறிமுதல் செய்து, ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post லாரிகளில் கடத்திய கிரானைட் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Rayakottai ,Odaiandaalli ,Krishnagiri ,Charangathura Saravanan ,Dinakaran ,
× RELATED எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை