×

கிருஷ்ணகிரி கால பைரவர் கோயிலில் சிறப்பு பூஜைகள்

 

கிருஷ்ணகிரி, மே 31: தேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி கால பைரவர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், கால பைரவ மஹா ஹோமம், பூர்ணாஹூதி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன.

உற்சவ கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. வருகிற ஜூலை 12ம் தேதி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால், காலபைரவ சுவாமி மூலவர் உள்ள அறை மூடப்பட்டு, கோயிலுக்கு அருகில் சிவலிங்கம் மற்றும் உற்சவ காலபைரவர் வைத்து யாகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சிவலிங்க வடிவில் சிவன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post கிருஷ்ணகிரி கால பைரவர் கோயிலில் சிறப்பு பூஜைகள் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri Kala Bhairava Temple ,Krishnagiri ,Kala ,Bhairava Temple ,Teipirai Ashtami ,Kalabhairavar temple ,Kallukkuriki Periyaeri West Kodi ,
× RELATED மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்கள் இருக்கிறார்களா?