×

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஜூன் 1:கெலமங்கலம் காவல்நிலைய எஸ்ஐ தினேஷ்குமார் மற்றும் போலீசார், ஜூஜூவாடி குடியூர் சாலையில் ரோந்து பணி சென்றனர். அப்போது, அங்குள்ள சோளக்கொட்டாய் பகுதியில், சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரண்டு பேரிடம் போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் குடியூர் பகுதியை சேர்ந்த ருத்ரன்(25), மல்லேஷ் (36) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ₹26 ஆயிரம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓசூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.

The post கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Kelamangalam ,Police Station ,SI Dinesh Kumar ,Jujuwadi Kudiyur Road ,Solakkottai ,Gudiyur ,
× RELATED பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்