×

பெட்டிஷன் மேளாவில் 16 மனுக்களுக்கு தீர்வு

 

ஊத்தங்கரை, மே 31: ஊத்தங்கரையில் காவல் துறை சார்பில், சிறப்பு பெட்டிஷன் மேளா நேற்று நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் கந்தவேல் தலைமை வகித்தார். எஸ்ஐக்கள் கணேஷ்பாபு, ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து 20 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 16 மனுக்களுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
இதில் குடும்ப பிரச்னை, நிலப்பிரச்னை, வாய்தகராறு உள்பட பல்வேறு பிரச்னைகள் சமரசம் செய்து முடித்து வைக்கப்பட்டது. இதில் பொதுமக்கள், போலீசார் பலர் கலந்துகொண்டனர்.

 

The post பெட்டிஷன் மேளாவில் 16 மனுக்களுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,Inspector ,Kandavel ,Ganesh Babu ,Ekambaram ,Uthankarai ,Dinakaran ,
× RELATED மது விற்ற 2 பேர் கைது