×

நடிகை குஷ்பு மீது போலீசில் புகார்

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளை முருகன்குறிச்சியை சேர்ந்தவர் வக்கீல் ராஜூ. இவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:  கடந்த 20ம் தேதி மாலையில் எனது டிவிட்டர் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஜெய்சங்கர் ஜெய்நாத் என்பவருக்கு பதில் அளிப்பதற்காக நடிகை குஷ்பு சமூக வலைதளத்தில் ‘‘செருப்பால் அடி, உங்கள் தொழிலை காப்பாற்றுவதற்காக, வீட்டு பெண்களை பயன்படுத்துபவராக நீங்கள் இருக்கலாம், வெட்கமற்ற மனிதர்கள்’’ என அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பெண்களை இழிவாக விமர்சித்துள்ளார். எனவே நடிகை குஷ்பு மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்ய வேண்டும். அவரை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். மனு அளிக்க வக்கீல்கள் அப்துல்ரசாக், தளவாய், ஆறுமுகம் ஆகியோர் உடன் வந்தனர்.

The post நடிகை குஷ்பு மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Khushbu ,Raju ,Palai Murukankurichi ,Nellai ,Nella ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...