சியோல்: வட கொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வரும் நிலையில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தென் கொரியா வந்துள்ளது. அமெரிக்க படைகளுடன் தென் கொரியா போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. வட கொரிய, தென் கொரிய எல்லைக்கு அருகே மிகப்பெரிய அளவில் போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நேற்றுமுன்தினம் சோதனை செய்தது.
இந்நிலையில், அமெரிக்கா- தென் கொரியாவுக்கு நேரடி எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தென் கொரியாவுக்கு 150 டோமஹாக் ஏவுகணைகளை எடுத்து செல்லும் திறன் கொண்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது. யுஎஸ்எஸ் மிச்சிகன் எனப்படும் இந்த கப்பல் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். டோமஹாக் ஏவுகணை 2,500 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. அந்த நீர்மூழ்கிக் கப்பல் தென்கிழக்கு துறைமுக நகரமான பூசானை வந்தடைந்தது.
The post வட கொரியா ஏவுகணை சோதனை எதிரொலி: அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தென் கொரியா வந்தது appeared first on Dinakaran.
