×

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மாநில அவசர கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சென்னை : ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மீட்பு பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஒடிசா ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும் சரக்கு ரயிலும் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

The post ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மாநில அவசர கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister of ,State Emergency Control Room ,Odisha train ,CM. G.K. stalin ,Chennai ,Chennai Southern Railway Head Office ,G.K. ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...