செங்கல்பட்டு: செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் அருகே குப்பை கிடங்கு உள்ளது. இங்கு செங்கல்பட்டு நகரம் உள்பட பல பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டிவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை குப்ைப மேட்டில் இருந்து கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்ததால் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதியுற்றனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் 30 நிமிடம் போராடி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுபற்றி செங்கல்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர். குடிபோதையில் யாராவது குப்பை கிடங்குக்கு தீ வைத்தார்களா, மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா என்று விசாரிக்கின்றனர். செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையம் அருகே குப்பை கிடங்கில் பயங்கர தீ appeared first on Dinakaran.
