×

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற சென்னை ரிசர்வ் வங்கி முன்பு குவிந்த மக்கள்: நீண்ட வரிசையில் நின்றனர்

சென்னை: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு சென்னை ரிசர்வ் வங்கி முன்பு நேற்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை மாற்றி சென்றனர். இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 19ம் தேதி(வெள்ளிக்கிழமை) நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த 23ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 8 ஆயிரம் வங்கி கிளைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றி வருகின்றனர்.

2 ஆயிரம் நோட்டை மாற்ற கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்ப்பார்த்த அளவுக்கு நேற்று வரை கூட்டம் வரவில்லை. வழக்கமாக வங்கிகளுக்கு வருபவர்களின் கூட்டமே வங்கிகளில் காணப்பட்டு வருகிறது. சில வங்கிகளில் மட்டும் 2 ஆயிரம் நோட்டை மாற்ற சற்று கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. கெடு விதிக்கப்பட்டுள்ள கடைசி ஒரு வாரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுவும் வங்கிகளில் ஒருவருக்கு பத்து 2 ஆயிரம் நோட்டுக்கள் மட்டுமே ஒரே நேரத்தில் மாற்ற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் பணத்தை வைத்துள்ளவர்கள் பான்கார்டு எண்ணை காண்பித்து வங்கிகளில் டெபாசிட் தான் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில் நேற்று ஏராளமானோர் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி முன்பு குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றி சென்றனர். வங்கிகளில் ரூபாய் நோட்டு மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து கூட்டம் காணப்படாத நிலையில், நிறைய பேர் பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கி முன்பு குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

The post 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற சென்னை ரிசர்வ் வங்கி முன்பு குவிந்த மக்கள்: நீண்ட வரிசையில் நின்றனர் appeared first on Dinakaran.

Tags : Chennai Reserve Bank ,Chennai ,Reserve Bank of Chennai ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...