காந்திநகர்: குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பால் கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால் ஆவின் நிறுவனத்துக்கு சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீட்டின் மிக பெரிய பால் உற்பத்தி நிறுவனமான அமுல் குஜராத்திற்கு வெளியே பல மாநிலங்களில் கால் பாதிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பே அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்ய முயன்றது. ஆனால், அது வெற்றி அடையவில்லை. அதே நேரத்தில் நெய், மில்க் ஷேக், ஐஸ் கிரீம் உள்ளிட்ட அமுல் தயாரிப்பு பொருட்கள் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்வதற்கான பணிகளை அமுல் நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் விளம்பரங்களை வெளியிட்டு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவின் கொடுப்பதை விட லிட்டருக்கு ரூ.2 வரை அதிகம் கொடுப்பதாகவும், இரண்டே நாட்களில் பணப்பட்டுவாடா செய்யப்படும் என்றும் பால் உற்பத்தியாளர்களிடம் அவர்கள் உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.
வட மாநிலங்களில் கொள்முதல் செய்யப்படும் பால் கர்நாடக, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஏன்று எதிர்பார்க்கப்படுகிறது. அமுல் நிறுவனத்தின் இந்த முன்னெடுப்பால் ஆவினுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மற்ற தனியார் நிறுவனங்களை போல அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்து கொள்ளலாமே தவிர தமிழ்நாட்டில் பால் கூட்டுறவு சங்கங்களை அமைக்க முடியாது என்று ஆவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் கால் பதிக்கும் குஜராத்தின் அமுல் நிறுவனத்தின் வரவால் பாதிப்பில்லை: ஆவின் விளக்கம் appeared first on Dinakaran.
