சென்னை: கோடை சீசனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் 50 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. கோடை சீசனில் பயணிகளுக்கு சுமூகமான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்யும் வகையில் 50 சிறப்பு ரயில்களை (244 சேவைகளுடன்) தெற்கு ரயில்வே இயக்குகிறது. 526 சேவைகளுடன் 37 கோடைகால சிறப்பு ரயில்கள் மற்ற மண்டல ரயில்வே மூலம் தெற்கு ரயில்வேயில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தாம்பரம் திருநெல்வேலி / செங்கோட்டை, சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி / நாகர்கோவில் / வேளாங்கண்ணி, திருவனந்தபுரம் மங்களூரு, கொச்சுவேலி -பெங்களூரு போன்ற முக்கிய இடங்கள்/வழிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கோடைகால சிறப்பு ரயில்கள் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கு கோடை காலத்தில் மேம்பட்ட இணைப்பை உறுதி செய்யும். மேலும், தெற்கு ரயில்வேயில் இணைக்கப்பட்டுள்ள முக்கிய இடங்கள் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, வேளாங்கண்ணி மற்றும் மங்களூரு ஆகும்.
மலை வாசஸ்தலங்களான ஊட்டி மற்றும் குன்னூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, வழக்கமான சேவைகள் மட்டுமின்றி, நீலகிரி மலை ரயிலில் கோடைகால (முன்பதிவு) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஊட்டி மற்றும் கேட்டி இடையே ஏப்ரல் 2023 முதல் வார இறுதி நாட்களில் மூன்று சுற்று பயண எம்எம்ஆர் ஜாய் ரைடு சேவைகளும் இயக்கப்படுகின்றன.
The post கோடை சீசனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் 50 சிறப்பு ரயில்கள்: அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை appeared first on Dinakaran.
