×

பாலியல் தொல்லைக்கு ஆளானதாக மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசரணையை மே-12ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் தொல்லை புகாருக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் ஷரணுக்கு எதிராக ஏற்கனவே டெல்லி காவல்துறை கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த புலன் விசாரணையை கண்காணிக்கவும் பாதிக்கப்பட்ட அந்த பெண் வீராங்களைகளின் வாக்குமூலத்தை விரைவாக பதிவுசெய்ய கோரி வீராங்கனைகள் தாக்கல் செய்த மனுவை டெல்லி தலைமை குற்றவியல் நீதிமன்றதில் விசரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் மற்றும் புலன் விசாரணைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டியுள்ளது. மேலும் இந்த விசாரணையை மே-12ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த வழக்கின் புலன் விசரணையை டெல்லி தலைமை குற்றவியல் நீதிமன்றம் கண்காணிப்பது பற்றி தெரியவரும்

The post பாலியல் தொல்லைக்கு ஆளானதாக மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi District Court ,Delhi ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...