×

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க 2 ஆண்டில் ரூ.19,000 கோடியில் திட்டப்பணிகள் நிறைவேற்றம்: அமைச்சர் ேக.என்.நேரு பெருமிதம்

சேலம்: தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, கடந்த 2 ஆண்டுகளில் ரூ.19,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ேக.என்.நேரு தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, ரூ.10.77 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, நேற்று ஏற்காட்டில் நடந்தது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ேக.என்.நேரு, புதிய குடிநீர் திட்டத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். பின்னர், அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 544 இடங்களில், கிட்டத்தட்ட 5 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில், பட்டா வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.18,600 கோடி மதிப்பில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் செய்ததை விட, கடந்த 2 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு கூடுதலாக, ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப் பணிகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது, ரூ.1,500 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது 2ம் கட்டமாக, தர்மபுரி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

The post பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க 2 ஆண்டில் ரூ.19,000 கோடியில் திட்டப்பணிகள் நிறைவேற்றம்: அமைச்சர் ேக.என்.நேரு பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Minister ,N.N. Nehru ,Salem ,Tamil Nadu ,N.N. ,Nehru ,Pride ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...