×

கோடை கால விளையாட்டு போட்டிகள்

கிருஷ்ணகிரி, மே 5: கிருஷ்ணகிரி- சென்னை சாலையில் சுபேதார் மேட்டில் இயங்கி வரும் பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகன்டரி சிபிஎஸ்இ பள்ளியில், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான கோடை கால விளையாட்டு போட்டிகள் 4 நாட்கள் நடைபெற்றது. துவக்க விழாவிற்கு பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணி தலைமை வகித்தார். தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலாளர் டாக்டர் சந்தோஷ், இணை செயலாளர் உஷா சந்தோஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் பாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். மாணவ- மாணவிகள், பொதுமக்கள், பெற்றோர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. இறுதி நாளில் குலுக்கல் முறையில் ₹25,000 ரொக்க பரிசை பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணி மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். பள்ளி முதல்வர் ஹரிநாத் நன்றி கூறினார்.

The post கோடை கால விளையாட்டு போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Bharat International Senior Secondary ,CBSE ,Subedar Mat ,Krishnagiri- ,Chennai ,Dinakaran ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்