- மின்சார விநியோக ஒழுங்குமுறை ஆணையம்
- சென்னை
- இந்திய மின்சார விநியோக ஒழுங்குமுறை ஆணையம்
- தமிழ்நாடு பவர் சிஸ்டம் கார்ப்பரேஷன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: இந்திய மின் வினியோக ஒழுங்குமுறை நிறுவனம் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த ஏப்.20ம் தேதியன்று மாநிலத்தில் அதிகபட்ச மின் தேவை 19,387 மெகாவாட் பதிவானது, மின் நுகர்வு அடிப்படையில் 41.53 கோடி யூனிட் நுகர்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் தற்போதைய இறக்குமதி திறன் 12,500 மெகாவாட் ஆக உள்ளது. 2026-27ம் ஆண்டுகளில் மின் தேவை 27,000 மெகவாட் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இறக்குமதி தேவை 18,000 மெகாவாட் வரை அதிகரிக்கலாம். 230 கிலோ வாட் மின் தடங்களில் உள்ள பிரச்னைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்க்க வேண்டும் இல்லையெனில் பிரச்னை தீவிரமடையும். எனவே விரைவில் துணை மின் நிலையங்களில் ஆய்வு செய்து மின் தடங்களை பலப்படுத்த வேண்டும். இல்லை என்றால் மாநிலத்தின் இறக்குமதி திறன் பாதிக்கப்படும்.
The post துணை மின் நிலையங்களில் ஆய்வு செய்து மின் தடங்களை பலப்படுத்த வேண்டும்: மின் விநியோக ஒழுங்குமுறை நிறுவனம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
