×

கிண்டி கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடியின் மனதின் குரல் ஒலிபரப்பு: சாதனையாளர்களை பாராட்டினார் ஆர்.என்.ரவி

சென்னை: கிண்டி கவர்னர் மாளிகையில் பிரதமர் ேமாடியின் மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடியின் மனதின் குரல் 100வது நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை, சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை வரவேற்றார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விழாவில் பங்கேற்று பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின்போது இடம்பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களான விழுப்புரம் செ.குன்னத்தூர் அரசுப்பள்ளி தமிழ் ஆசிரியை ஹேமலதா, சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த 95 வயதான ஆன்மிக எழுத்தாளர் ஸ்ரீனிவாசாச்சாரியார், சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி, மதுரையைச் சேர்ந்த தொழில் முனைவோர் அருள்மொழி சரவணன், பார்வையற்ற மாற்றுத்திறனாளி ராணுவ அதிகாரியான துவாரகிஷ்,

பசுமையான பூமியை உருவாக்குவதை லட்சியமாக கொண்டு செயல்படும் 10 வயது சிறுமி பிரசித்திசிங், வாழை நாரில் கயிறு தயாரிக்கும் கருவியை கண்டுபிடித்து கயிறு தயாரித்தல், அதன்மூலம் கைவினை பொருட்களை உற்பத்தி செய்தல் போன்றவற்றை மேற்கொண்டு வரும் மதுரை மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வாழை முருகேசன், சலூன் கடையில் நூலகம் அமைத்து நடத்தி வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த பொன் மாரியப்பன் உள்ளிட்டோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.

இதைத்தொடர்ந்து பத்மஸ்ரீ விருதுபெற்ற பாம்புபிடி வீரர்களான மாசி சடையன், வடிவேல் கோபால், பாரம்பரிய நெல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் விவசாயி ராஜீவ், ஏழ்மை நிலையில் இருந்து தொழில் அதிபராக மாறிய தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த வி.டி.பாலன் ஆகியோர் தங்களது சாதனைகளை எடுத்துரைத்தனர். விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘இந்தியாவில் 23 கோடி மக்கள் மனதின் குரல் நிகழ்ச்சியை தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.

அதேபோல் 100 கோடி மக்கள் ஒரே ஒரு முறையாவது மனதின் குரல் நிகழ்ச்சியை முழுவதுமாக கேட்டு இருப்பார்கள். உலகில் அதிக மக்களால் கேட்கப்படும் ஒரே நிகழ்ச்சி மனதின் குரல் மட்டுமே. சாதாரணமான தோற்றத்துடன் மிகப்பெரிய பணிகளை செய்து வருவோரை பாராட்டி கவுரவிப்பதற்காகவே நம் பிரதமர் தனி கவனமும், நேரமும் செலவிட்டு வருகிறார்’’ என்றார். முன்னதாக மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது சிறப்பு டிஜிட்டல் இதழை ஆர்.என். ரவி வெளியிட்டார்.

The post கிண்டி கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடியின் மனதின் குரல் ஒலிபரப்பு: சாதனையாளர்களை பாராட்டினார் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.

Tags : Modi ,Kindy Governor House ,R.R. N.N. Ravi ,Chennai ,Gindi Governor's ,House ,Governor ,Kindy ,Governor House ,R. N.N. Ravi ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...