×

பெரம்பலூரில் மழை விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டி விழிப்புணர்வு பேரணி

 

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த கல்வி ஆண்டின் கடைசி நாளான நேற்று முன்தினம் வரும் கல்வி ஆண்டில் பள்ளியில் மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது . இந்த விழிப்புணர்வு பேரணியில் அரசு மேல்நிலைப் மாணவ, மாணவிகள் பள்ளியில் இருந்து பேரணியாக துவங்கி விக்கிரமங்கலத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர்.

இதில் பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்திய பதாகைகளுடன் வரிசையாக பள்ளியில் மாணவர் சேர்க்கை காண விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி சென்றனர் . முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்த விழிப்புணர்வு பேரணி மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா முன்னிலையில் நடைபெற்றது. இந்த பேரணியை விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார் இதில் பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர் .

The post பெரம்பலூரில் மழை விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டி விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Vikramangalam Govt Higher Secondary School ,Perambalur ,Tha.Balur ,Vikramangalam Government High School ,Ariyalur ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...