×

ஒழுங்குமுறை ஆணையம் தகவல்: மின் இணைப்புக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்தில் இணைப்பு வழங்க நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின் விநியோகக் நெறிமுறை, 2004ல் திருத்தம் செய்வதற்கான வரைவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மின் இணைப்பு கோரும் நுகர்வோருக்கு ஒரு வாரத்தில் இணைப்பு வழங்கி மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய மின் இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கும் விநியோகம் வழங்குவதற்கும் இடையே கால இடைவேளி அதிகமாக இருக்கிறது. தற்போது பதிவின் முதல் கட்டத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு தோண்ட வேண்டிய அவசியம் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கும் இடங்களில் இணைப்புகள் இணைந்து இருப்பதற்கான சட்டப்பூர்வ விதிகளையும் வகுக்கபட்டுள்ளது. நுகர்வோர் ஆலோசனைகளை tnerc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மே 25ம் தேதிக்குள் அனுப்பலாம்.

The post ஒழுங்குமுறை ஆணையம் தகவல்: மின் இணைப்புக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்தில் இணைப்பு வழங்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Regulatory Commission ,Chennai ,Veeramani ,Tamil Nadu Electricity Regulatory Commission ,Tamil Nadu ,Commission ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...