×

தமிழ்த்தாய் வாழ்த்து மெட்டு சரியில்லாமல், அதனை அவமதிப்பதுபோல் இருந்ததால் நிறுத்தினோம்: அண்ணாமலை விளக்கம்

கர்நாடகா: தமிழ்த்தாய் வாழ்த்து மெட்டு சரியில்லாமல், அதனை அவமதிப்பதுபோல் இருந்ததால் நிறுத்தினோம். என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். கர்நாடக சட்டபேரவை தேர்தலில் தமிழர்களின் ஆதரவு பெறும் வகையில் ஷிவமொக்கா மாநகரில் நேற்று அம்மாவட்டத்தில் வாழும் தமிழர்களை ஓரிடத்தில் அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கர்நாடக முன்னாள் துணைமுதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, தமிழ்நாடு பாஜ தலைவர் கே.அண்ணாமலை உள்பட கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களை சேர்ந்த பாஜக தலைவர்கள் இருந்தனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன் கர்நாடக மாநில நாட்டுப்பண் இசைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசின் மாநில மொழி பாடலான நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்’’ என்ற பாடல் ஒலிப்பரப்பானது. உடனடியாக பாடலை நிறுத்தும்படி கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார். அதன் பின் கர்நாடக மாநில மொழி பாடல் இசைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு எந்த சலனமும் இல்லாமல் பா,ஜ தமிழ்நாடு பிரிவு தலைவரான அண்ணாமலை அமைதிகாத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த அண்ணாமலை, தமிழ்த்தாய் வாழ்த்து மெட்டு சரியில்லாமல், அதனை அவமதிப்பதுபோல் இருந்ததால் நிறுத்தினோம். என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி ஈஸ்வரப்பா அவர்கள் சுட்டிக் காட்டினார். எடப்பாடி பழனிசாமி அண்ணனுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்றார். ஓபிஎஸ் இணைவாரா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்தார்.

The post தமிழ்த்தாய் வாழ்த்து மெட்டு சரியில்லாமல், அதனை அவமதிப்பதுபோல் இருந்ததால் நிறுத்தினோம்: அண்ணாமலை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,bajaka ,anamalai ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...