×

பெரியார் பல்கலை.யில் முறைகேடு பாமக எம்எல்ஏ உள்பட 10 பேரிடம் விசாரணை

ஓமலூர்: பெரியார் பல்கலைக்கழகத்தில் மோசடிகள், ஊழல்கள் குறித்து பாமக எம்எல்ஏ உட்பட 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த நியமனங்கள், கொள்முதலில் முறைகேடு மற்றும் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், முறைகேடு தொடர்பாக புகார் அளித்த சேலம் மேற்கு ெதாகுதி பாமக எம்எல்ஏ அருள், பெரியார் பல்கலைகழக ஆசிரியர் சங்கத் தலைவர் வைத்தியநாதன் உட்பட 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, நேற்று அருள் எம்எல்ஏ, பல்கலைக்கழக தொழிலாளர் சங்க தலைவர் கனிவண்ணன், ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன், அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் அண்ணாதுரை, ஜனநாயக மாணவர் சங்கம், அம்பேத்கர் கல்வி இயக்க நிர்வாகிகள் என 10 பேர் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் பல்கலைக்கழக தற்போதைய நிர்வாகத்தின் மீதுள்ள புகார்கள், ஊழல்கள், முறைகேடுகள், பேராசிரியர் பெரியசாமி, பொறுப்பு பதிவாளர் தங்கவேல் ஆகியோர் மீதான புகார்கள் குறித்து தங்களிடம் உள்ள ஆதாரங்கள், ஆவணங்களை வழங்கினர். மேலும், பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து நேரடியாகவும் புகார் தெரிவித்தனர்.

The post பெரியார் பல்கலை.யில் முறைகேடு பாமக எம்எல்ஏ உள்பட 10 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Bamaka MLA ,Periyar University ,Omalur ,BAM MLA ,Salem ,Periyar ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...