×

லப்பைகுடிக்காட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு கூட்டம்

 

குன்னம், ஏப்.26: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி மேற்கொண்டு வரும் நிலையில் இலப்பைக்குடிக்காட்டில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கூட்டத்தில் கலந்து கொண்டு எஸ்பி ஷ்யாமளா தேவி பேசுகையில், இலப்பைக்குடிகாடு கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் பெரம்பலூர் மாவட்டம் குற்றமில்லாத மாவட்டமாக திகழ பொதுமக்களாகிய நீங்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் போதை பழக்கங்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்க வேண்டும்.

கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிக்க பொதுமக்களாகிய உங்களுக்கு மேற்கண்ட தீய பழக்கங்கள் குறித்த முழு விழிப்புணர்வு வேண்டும் .பெற்றோர்களாகிய நீங்கள் உங்களது பெண் குழந்தைகளுக்கு தொடுதல் குறித்த விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.மேலும் இளைஞர்கள் அனைவரும் முன்னேற்ற பாதையில் செல்வதற்கான அறிவுறகள் வழங்கி இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.கூட்டத்தில் மங்களமேடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் சீராளன், மங்களமேடு காவல் ஆய்வாளர் நடராஜன் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் வெங்கடேசுவரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

The post லப்பைகுடிக்காட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : awareness ,Lappaigudikkad ,Gunnam ,Perambalur ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை