×

பவானிசாகர் அருகே தந்தை கண்முன்பு பவானி ஆற்றில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி மாயம்

*தீயணைப்புதுறை தீவிர ேதடுதல்

சத்தியமங்கலம் : பவானிசாகர் அருகே தந்தை கண்முன்பு பவானி ஆற்றில் குளித்த மகன் நீரில் மூழக்கி மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ளது தொப்பம்பாளையம். இங்குள்ள கிரசஷர்மேடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார். இவரது மகன்கள் யோகேஷ் (13), சபரீசன் (10). இதில் யோகேஷ் கோடேபாளையம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் குமார் தனது மகன்களை அழைத்துக்கொண்டு அக்கரை தத்தப்பள்ளி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் அணைத்துறை என்ற இடத்தில் குளித்தார்.

தற்போது பவானி ஆற்றில் 1,450 கன அடி தண்ணீர் செல்கிறது. ஆழமான பகுதிக்கு சென்ற யோகேஷ் திடீரென நீரில் மூழ்கி மாயமானார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை மகனை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனையடுத்து பவானிசாகர் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பவானி ஆற்றில் மாயமான யோகேஷை தேடி வருகின்றனர். தந்தை கண்முன்பு பவானி ஆற்றில் மகன் மூழ்கி மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பவானிசாகர் அருகே தந்தை கண்முன்பு பவானி ஆற்றில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி மாயம் appeared first on Dinakaran.

Tags : Bhavani river ,Bhavanisagar ,Sathyamangalam ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...