×

பொன்னேரி தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு வார விழா: துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு

பொன்னேரி: பொன்னேரி தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு வார விழா துண்டு பிரசுரங்கள் வழங்கி நடத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணி துறை மாவட்ட அலுவலர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், உதவி தீயணைப்பு மீட்புத்துறை மாவட்ட அலுவலர் வின்சென்ட் ராஜ்குமார் தலைமையில், பொன்னேரி தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் சம்பத் மற்றும் பணியாளர்கள் பங்கேற்ற தீ தொண்டு வார விழா நேற்றுமுன்தினம் பொன்னேரி தீயணைப்பு துறை அலுவலக வளாகத்தில் நடந்தது.

இதனை தொடர்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம், செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மீஞ்சூர், பொன்னேரி, மெதூர், பழவேற்காடு, திருப்பாலைவனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்றனர். அங்குள்ள பள்ளிகள், பஸ் நிறுத்தங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதியில் பணியாளர்கள் நேரடியாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர். பின்னர், தீப்பிடித்தால் அதனை அணைப்பதற்கான வழிகளை செயல்முறை விளக்கங்களுடன் எடுத்து கூறி பிரசாரம் செய்தனர். இந்த வாரம் முழுவதும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.

The post பொன்னேரி தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு வார விழா: துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Fire Charity Week ,Ponneri Fire Department ,Ponneri ,Tiruvallur District ,Fire Charity Week Festival ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...