×

உக்ரைன் மீதான போர் எதிரொலி ஐ.நா. தேர்தலில் ரஷ்யா தோல்வி

ஜெனீவா: உக்ரைன் மீதான நீண்ட போர் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று தேர்தல்களில் ரஷ்யா தோல்வி அடைந்துள்ளது. நேட்டோ அமைப்பின் 30வது நாடாக உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்துள்ளது. ‘ இந்நிலையில் 54 உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் ரஷ்யாவுக்கு எதிரான 6 கட்டுப்பாடற்ற தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போர் நிறுத்தம் மற்றும் படைகள் விலக்கம் தொடர்பாக ரஷ்யாவை வலியுறுத்தி ஐநா சபையில் நடந்த வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு எதிராக 141 வாக்குகளும், ஆதரவாக 7 வாக்குகளும் பதிவாகின. நடுநிலை என்ற பெயரில் 32 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், ஐநாவின் பெண்களுக்கான அமைப்பில் ருமேனியாவால் ரஷ்யா தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஐநா குழந்தைகளுக்கான அவசர நிதியமான யுனிசெப்பின் நிர்வாக குழு உறுப்பினருக்கான தேர்தலில் எஸ்டோனியாவாலும், குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான ஆணைய உறுப்பினருக்கான ரகசிய வாக்கெடுப்பில் அர்மீனியா மற்றும் செக் குடியரசு நாடுகள் ரஷ்யாவை தோற்கடித்துள்ளன.

The post உக்ரைன் மீதான போர் எதிரொலி ஐ.நா. தேர்தலில் ரஷ்யா தோல்வி appeared first on Dinakaran.

Tags : on Ukraine ,UN ,Russia ,GENEVA ,United Nations ,Ukraine ,NATO… ,Dinakaran ,
× RELATED ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக...