×

பெரம்பலூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுகணக்கு குழுவினர் வருகை முன்னிட்டு முன்னேற்பாடு பணி ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர்:பெரம்பலுார் மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொதுகணக்குக்குழுவினர் வருகைதரவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோச னைக்கூட்டம்.மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலுார் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேர வை பொது கணக்குக்குழு வினர் வருகிற 8ஆம் தேதியன்று ஆய்வு செய்யவுள்ளதையடுத்து, மேற்கொள்ளப் படவேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நேற்று(3ம்தேதி) மாவ ட்ட கலெக்டர்அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது

தமிழ்நாடு சட்டமன்றப்பேர வை பொது கணக்குக்குழு வின் தலைவரும், ஸ்ரீபெரு ம்புதூர் தொகுதி எம்எல்ஏ வுமான செல்வப்பெருந்தகை தலைமையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழ னிவேல்தியாகராஜன், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, தாம்பரம் தொகுதி எம்எல்ஏ ராஜா, பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ வேல்முருகன், கவுண்டம் பாளையம் தொகுதி எம்எல் ஏ அருண்குமார், வேடச்சந் தூர் தொகுதி எம்எல்ஏ காந் தி ராஜன், ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ கார்த்தி கேயன், மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சரஸ்வ தி, காட்டுமன்னார் கோவில் தொகுதி எம்எல்ஏ சிந்த னைச் செல்வன், மாதவரம் தொகுதி எம்எல்ஏ சுதர்சன ம், ஒசூர் தொகுதி எம்எல்ஏ பிரகாஷ், திருவாரூர் தொ குதி எம்எல்ஏ பூண்டி கலை வாணன், மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், திருத்துறைப் பூண்டி தொகுதி எம்எல்ஏ மாரிமுத்து,

வேப்பனஹ ள்ளி தொகுதி எம்எல்ஏ கே. பி.முனுசாமி, வீரபாண்டி தொகுதி எம்எல்ஏ ராஜமு த்து, சங்கரன் கோவில் தொகுதி எம்எல்ஏ இராஜா, பாபநாசம் தொகுதி எம் எல்ஏ ஜவாஹிருல்லா ஆகி யோரை உறுப்பினர்களாகக் கொண்டகுழு தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொது க்கணக்குக் குழுவாகும்.இக்குழுவினரின் வருகை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது : பெரம் பலூர் மாவட்டத்திற்கு வரு கை தரவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுகணக்குக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பி னர்களுக்கு முறையாக தொடர்பு அலுவலர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். பெர ம்பலுார் மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு திட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகத் தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளனர்.

தொடர்புஅலுவலர்களுக்கு உங்களுக்கான உறுப்பினர் களுடன் தொடர்புகொண்டு அவர்களின் வருகை நாள் நேரம் குறித்து அறிந்து கொண்டு, முறையாக வரவேற்று ஆய்வு முடிந்து செல்லும் வரை அவர்களுக்கான உதவிப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் குழுவினர் ஆய்வு செய்யவுள்ள இடங்களில் சம்மந்தப்பட்ட துறையின் அலுவலர்கள் செயல்படுத்தப்படும் திட்டம் தொடர்பான முழு தகவல்களுடன் ஆய்வுப்பணிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வுக்கூட்டத்தின் அனை த்துத்துறைகளின் முதல்நிலை அலுவலர்கள் பங்கு பெறவேண்டும் எனத்தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் அங்கயற் கண்ணி, மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது)சுப்பையா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Public Accounts Committee of Tamil Nadu Legislative Assembly ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தில் முறைகேடாக மது விற்ற நபர் கைது