×

ஓசூர் அருகே எருதுவிடும் விழா கோலாகலம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பி.முதுகானப்பள்ளி கிராமத்தில் பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக எருதுவிடும் விழா நடைபெற்றது. இதனை கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு துவக்கி வைத்தார். ஓசூர், ஆவலப்பள்ளி, தேவீரப்பள்ளி, முதுகானப்பள்ளி, பேரிகை, பாகலூர் என பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன. முன்னதாக போட்டியில் கலந்து கொண்ட எருதுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு எருதுகளாக அவிழ்த்து விடப்பட்டன. எருதுகளின் கொம்புகளில் அலங்கரிக்கப்பட்ட வண்ண மாலைகள், ரொக்கப் பரிசுகள் அடங்கிய தட்டிகள் கட்டப்பட்டிருந்தது. சீறிப்பாய்ந்து சென்ற எருதுகளை மாடுபிடி வீரர்கள் துரத்திச் சென்று அடக்கி தட்டிகளில் கட்டப்பட்டிருந்த பரிசுகளை பறித்தனர். சுமார் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறி பாய்ந்து ஓடிய எருதுகளை பிடித்து பரிசுகளை அள்ளிச் சென்றனர். எருதாட்டத்தை 3000க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். விழாவையொட்டி, போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Tags : Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு