×

மகளிர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத பெரம்பலூர் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட் முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவு

அரியலூர்: அரியலூர் மகளிர் நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து நேற்று உத்தரவிட்டது. ஆர்.எஸ்.மாத்தூர் கிராமத்ததைச் சேர்ந்தவர் பரமசிவம் (71). கடந்த 14.4.2015 அன்று பிற்பகல் வீட்டில் இருந்த இவரை, இவரது சகோதரர்கள் வெங்கடேசன், செல்வராஜ், செல்வம் ஆகிய 3 பேரும் சேர்ந்து வீட்டை காலி செய்யுமாறு கேட்டுள்ளனர். அதற்கு பரமசிவம், நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, காலி செய்ய இயலாது என்றும், தீர்ப்பு வந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து, பரமசிவத்தை தாக்கியுள்ளனர். அப்போது சண்டையை விலக்க வந்த தில்லை வள்ளாலன், ஆதிமூலம் ஆகியோரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பரமசிவம் தஞ்சாவூர் அரசு மருத்துகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து பரமசிவம் அளித்த புகாரின் பேரில், அப்போதைய குவாகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த கலா, கொலை முயிற்சி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தார். தற்போது இவர் பதவி உயர்வுப் பெற்று பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த வழக்கு ஜெயங்கொண்டம் குற்றவியியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருந்து அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்டது.11 சாட்சிகளில் 10 சாட்சிகளிடம் விசாரனை முடிவடைந்த நிலையில், இதுவரை பெரம்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலா ஆஜராகாமல் இருந்து வருகிறார்.  6.3.2023 அன்று இறுதி விசாரணை நடைபெறவுள்ளதால், காவல் ஆய்வாளர் கலாவுக்கு பிடிஆணை பிறப்பித்து அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகாலட்சுமி உத்தரவு பிறப்பித்தார்.

Tags : Principal Sessions ,Perambalur Women's Police Station Inspector ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கிலிருந்து...