×

காட்டுப்புத்தூரில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தொட்டியம், பிப்.21:காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமையில் செயல்படுத்தப்பட்டது. திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவின்பேரில் திருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரையின்படியும் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் தொடர்பாக வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர் ராஜேந்திரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Kattputhur ,
× RELATED காட்டுப்புத்தூர் பகுதியில் பலத்த மழை;...