×

கொங்கராயகுறிச்சியில் கால்நடை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா கனிமொழி எம்பி பங்கேற்பு

செய்துங்கநல்லூர், ஜூன் 8: ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சி கிராமத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் புதிய கால்நடை மருத்துவமனைக்கான கட்டிட பணி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கலெக்டர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கனிமொழி எம்பி புதிய கால்நடை மருத்துவமனைக்கான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.கொங்கராயகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் ஆபிதா அப்துல் சலாம் நன்றி கூறினார்.விழாவில் தூத்துக்குடி ஆர்டிஓ சிவசுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாக்கிய லீலா, மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே. ஜெகன், கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன், கருங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுரேஷ் காந்தி, மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் கலீலூர் ரகுமான், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பக்கப்பட்டி சுரேஷ்,பழனி குமாரசாமி, வீரபாகு, ஒன்றிய கவுன்சிலர் மைமூன் அப்துல் கரீம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமார், முன்னாள் சேர்மன் தளபதி பிச்சையா, விவசாய அணி அமைப்பாளர் நேரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Konnaryakuricuhi Veterinary Hospital Flowering Country Festival ,Kanilingulhi ,
× RELATED ஓய்வூதியர் தின விழா