×

ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கமிஷனர் பரிசு வழங்கி பாராட்டு

திருச்சி, மே 30:திருச்சி ரைபிள் கிளப்பில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கமிஷனர் கார்த்திகேயன் பரிசு வழங்கி பாராட்டினார். திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபிள் கிளப் கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி புதிதாக திறக்கப்பட்டது. மாவட்ட தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் அமைக்கப்பட்ட இந்த ரைபிள் கிளப், மாநகர கமிஷனரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. திருச்சி மாநகர ரைபிள் கிளப்பில் மொத்தம் 215 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் உள்ளனர். இந்த கிளப்பில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளம், 25 மீட்டர் தூரத்தில் சுடுதளம், 10 மீட்டர் தூரத்தில் சுடுதளம் உள்ளது. மேலும் உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டு்ளளது. இந்த ரைபிள் கிளப்பில் துபாக்கி சுடும் பயிற்சி பெற ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்கு ஏர்ரைபிள் பயிற்சிக்கான கோடை கால சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த கோடை கால முகாமில் 12 முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் எனவும் காவல்துறை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் முதல் பேட்ச் முடிந்து 2வது பேட்ச பயிற்சி கடந்த 15ம் தேதி முதல் நடந்து வருகிறது. இரண்டாவது பேட்சில் 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் மொத்தம் 80 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் முதலிடத்தை மாணவி நிறைமொழி, 2வது இடத்தை மாணவி கண்பத்தர்ஷனா மற்றும் 3வது இடத்தை மாணவர் அஸ்வந்த் பிடித்தார். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி மாணவ, மாணவிகளுக்கு மாநகர கமிஷனர் கார்த்திகேயன் நேற்று பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது ரைபிள்கிளப் செயலாளர் செந்தூர்செல்வன் உடனிருந்தார். மேலும் திருச்சி ரைபிள் கிளப்பின் அனைத்து தகவல்களுக்கும் திருச்சி ரைபிள் கிளப் எண் 98433 70804 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என காவல் துறை வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Rifle Club ,
× RELATED துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது...