×

கிருஷ்ணகிரியில் 28ம்தேதி மகா சிவராத்திரி திருவிழா

கிருஷ்ணகிரி, பிப்.26: கிருஷ்ணகிரி பழையபேட்டையில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மகா சிவராத்திரி திருவிழா வரும் 28ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்க உள்ளது. இதையொட்டி அன்று காலை முளைப்பாரி எடுத்தல், கணபதி ஹோமம், பரிவார பூஜையுடன் அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 1ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு சக்தி கரகம், அக்னி கரகம், கங்கையில் நீராடி விட்டு சன்னதி பிரவேசமும், காலை 4 மணிக்கு மயானத்திற்கு முகவெட்டு எடுத்துச் செல்லுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
2ம் தேதி காலை 5.30 மணிக்கு சூலம் போடுதலும், 3ம் தேதி மாலை 6 மணிக்கு விடாய் உற்சவமும் நடக்கிறது. 4ம் தேதி மாலை 6 மணிக்கு அக்னி குண்டம் தீமிதி விழாவும், உதயகீதம் இசைக்குழுவின் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. 5ம் தேதி பகல் 11 மணிக்கு அம்மன் திருக்கல்யாணமும், மாலை 5 மணிக்கு அம்மையப்பன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு ஞானசக்தியின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. 6ம் தேதி இரவு அன்னதானமும், கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பருவதராஜ குல மீனவர் சமுதாயம் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்துள்ளனர்.

Tags : Maha Shivaratri Festival ,Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்