×

(தி.மலை) உண்டியல் பணம் திருடிய வழக்கில் 2 பேர் கைது வந்தவாசி அருகே அம்மன் கோயிலில்

வந்தவாசி, டிச.15: வந்தவாசி அருகே அம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருடப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த குணக்கம்பூண்டி கிராமத்தில் வேம்புலி அம்மன் கோயில் உள்ளது. 10ம் தேதி இரவு இக்கோயிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் தேசூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வந்தவாசி சப்-டிவிசன் குற்றப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தணிகைவேல் தலைமையில் ஏட்டுக்கள் முருகன், ஏழுமலை ஆகியோர் நேற்று தேசூர்- வந்தவாசி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை மடக்கி விசாரணை நடத்தினர். மேலும், பைக்கை சோதனை செய்ததில் ₹2 ஆயிரம் சில்லரை நாணயம், இரும்பு ராடு ஆகியன இருந்தது. இதையடுத்து, 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் தேசூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(22) மற்றும் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது ெதரியவந்தது. மலும், குணக்கம்பூண்டி கிராமத்தில் அம்மன் கோயில் உண்டியலை உடைத்து, காணிக்கை பணம் திருடியவர்கள் என்பதும் தெரிந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி 16 வயது சிறுவனை கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், சதீஷ்குமாரை வந்தவாசி கிளை சிறையிலும் அடைத்தனர்.

Tags : T.Malai ,Amman temple ,Vandavasi ,
× RELATED பீடி புகைத்த முதியவர் தீயில் கருகி பலி கட்டிலில் படுத்துக் கொண்டு