×

கார்த்திகை 4வது சோமவாரம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

குளித்தலை, டிச. 15: சிவ தலங்களில் பிரசித்திபெற்ற கோயில்களை ஒரே நாளில் தரிசனம் செய்து வந்தால் புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம். அதேபோல் கார்த்திகை மாதத்தில் வரும் சோம வாரத்தில் நான்காவது சோமவாரம் நாளன்று சிவாலயங்களில் நடைபெறும் 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சியும் சிறப்பு வாய்ந்தது.  இந்நிலையில் நான்காம் சோமவார விழா என்பதால் குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கடம்பவனேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags : Karthiga ,Somwaram Bathalai ,Sanghabishekam ,Kambavaneswarar Temple ,
× RELATED மாயன் கால உணவு – மரவள்ளி!