தண்டராம்பட்டு, டிச.10: சிறுப்பாக்கம் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஆக்கிரமிப்பு நேற்று அகற்றப்பட்டது.தண்டராம்பட்டு அடுத்த சிறுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய ஏரி 143 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 30 சென்ட் அளவில் ஏரி ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். நேற்று தானிப்பாடி உதவி செயற்பொறியாளர் ஹரிஹரன், சர்வேயர் உமாநாத், விஏஓ ஜெயமணி, பொதுப்பணி துறை ஊழியர்கள் மற்றும் காவல்துறை உதவியுடன் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு பகுதியை ஜேசிபி உதவியுடன் அகற்றினர்.
