×

15ம் தேதி கடைசி நாள் தொடக்க கல்வி பட்டயத்தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் ஒளி நகல் பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர்,நவ.2: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள்களின் ஒளி நகல் பெற இன்று (1ம்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில் வாகனன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுதிய மாணவர்கள் விடை தாழ்களின் ஒளிநகல் பெற, விடைத்தாள்கள் மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்துகொண்டு,

அதனை பூர்த்தி செய்து அவ்விண்ணப்பத்துடன் இன்று (1ம்தேதி) முதல் வருகிற 4ம்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை பாடாலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் சென்று பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் விடைத்தாள் நகல் வேண்டி விண்ணப்பிக்க ஒரு பாடத்திற்கு ரூ.275-ம், விடைத்தாளின் மறு கூட்டலுக்கு ஒரு பாடத்திற்கு ரூ.205ம் செலுத்த வேண்டும் எனத்தெரிவித்தார்.

Tags : Charter ,Farewell ,
× RELATED அரசியல் சாசனத்தை காப்பதற்கான போராட்டம் இது: ராகுல் காந்தி பேட்டி