×

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் வீடுதேடி வரும் தபால்காரரிடம் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கலாம்

தஞ்சாவூர், ஜூன் 9: ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில அரசு ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஜூலை 1ம் தேதி முதல் 30 செப்டம்பர் 30ம் தேதி வரை, அவர்களது வீட்டு வாசலிலேயே, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முகம் சரிபார்ப்பு முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், PPO எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை அல்லது முகம் பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். மேலும் இச்சேவையை பெறுவதற்கு கீழ்காணும் இணையதள, வாட்ஸ்அப் வழிகளை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க உங்கள் பகுதி தபால்காரர் உங்களை தேடி வந்து உங்கள் தேவையை பூர்த்தி செய்து தருவார்கள். https://ccc.cept-gov.in/covid/request.aspx > service request >IPPB Jeevan Pramaan மற்றும் Whatsapp 8904893642 (Business Account) எனவே மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் வீடுதேடி வரும் தபால்காரரிடம் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,
× RELATED வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக...