×

வேப்பூர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

 

குன்னம், ஜூன் 7: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் சுற்று வட்டார பகுதிகள் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். வயலப்பாடி, வேப்பூர், ஓலைப்பாடி, அத்தியூர், லெப்பைகுடிக்காடு, ஒகளூர், வயலூர், அகரம்சீகூர் உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரண்டு மணி நேரமாக பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக இருந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது 2 நாட்களாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுகிறது. வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த நெல் அறுவடைகள் முடிந்து உழவுக்கு விவசாயிகள் தயாரான நிலையில் தற்சமயம் பெய்து வரும் இந்த மழையால் தண்ணீர் பிரச்னை இல்லாமல் விவசாயம் நடைபெறுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post வேப்பூர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Veypur ,Gunnam ,Gunnam district ,Perambalur district ,Vayalapadi ,Olaipadi ,Athiyur ,Leppaikudikkadu ,
× RELATED வேப்பூரை பேரூராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை